Saturday, July 27, 2024
31 C
Colombo
வடக்குவவுனியாவில் ஹெரோயினுடன் யுவதி கைது

வவுனியாவில் ஹெரோயினுடன் யுவதி கைது

வவுனியாவில் ஹெரோயினுடன் யுவதி ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

அவர் விற்பனை செய்யும் நோக்கில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு பிரதான வீதியின் வடக்கு பயாகல பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் பேருந்தை...

Keep exploring...

Related Articles