Tuesday, April 22, 2025
27 C
Colombo
சினிமாநடிகர் பஹத் பாசிலுக்கு மூளை பாதிப்பு

நடிகர் பஹத் பாசிலுக்கு மூளை பாதிப்பு

பிரபல நடிகர் பஹத் பாசில் தனக்கு அரியவகை நரம்பியல் தொடர்பான நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்து மிரட்டியுள்ளார்.

அதேபோல் தெலுங்கில் இவர் நடித்த பொலிஸ் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் விழா ஒன்றில் தனக்கு உள்ள அரியவகை நோய் குறித்து பகத் பாசில் மனம் திறந்துள்ளார்.

அவர் ADHD எனும் கவனக் குறைபாடு, Hyperactivity கோளாறை எளிதில் குணப்படுத்த முடியுமா என்று மருத்துவர் ஒருவரிடம் கேட்டாராம்.

அதற்கு அவர் சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என்று கூறினாராம்.

இந்த நரம்பியல் தொடர்பான குறைபாடு இருக்கும் ஒருவர் அதிக மறதி கொண்டவர்களாகவும், ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக கருதாதவர்களாக இருப்பார்களாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles