பொலிவுட் நடிகர் ஷாருக்கான் அஹமதாபாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதே அவர் ‘வெப்ப வாதத்தால்’ பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.