Friday, January 17, 2025
24.1 C
Colombo
வடக்குகடலில் தவறி வீழ்ந்து மீனவர் பலி

கடலில் தவறி வீழ்ந்து மீனவர் பலி

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற வேளை, கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles