கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை (04) செயற்படவுள்ளது.
சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் நாளை (04) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருணாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்களில், காலை 8:30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.