வரக்காபொல, மொரகல்ஹேன பிரதேசத்தில் நேற்று (01) பிற்பகல் மண் மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் கரைக்கு அருகில் கட்டிடம் கட்டுவதற்கு அடித்தளம் தயார் செய்து கொண்டிருந்த போது, அந்த இடத்தில் இருந்த மண்மேட்டின் ஒரு பகுதி அவர் மீது சரிந்துள்ளது.
படுகாயமடைந்த குறித்த நபர் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எலிபங்கமுவ, தோலங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.