யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனையின் போது , திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்துள்ளன.
அது தொடர்பில் சுகாதார பரிசோதகரால் உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு , குறைகளை சீர் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
மறுபரிசோதனைக்காக நேற்றைய தினம் குறித்த உணவகத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் சென்ற போது குறைகள் சீர் செய்யப்படாததை அடுத்து , மூன்று உணவக உரிமையாளர்களுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களுக்கு 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவக சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகங்களுக்கு சீல் வைக்கமாறு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து மூன்று உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.