Wednesday, April 30, 2025
30 C
Colombo
வடக்குகொக்குவில் ரயில் நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது

கொக்குவில் ரயில் நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது

யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டது.

கொக்குவில் ரயில் நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி 20 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக ரயில் நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles