Tuesday, April 22, 2025
25 C
Colombo
வடக்குஎரி காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு

எரி காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை அவரது மகள் வெளியே சென்றிருந்த போது, குறித்த முதியவர் பீடி புகைப்பதற்கு முயன்றவேளை படுக்கையில் தீப்பரவல் ஏற்பட்டு அவர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles