இந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் ஔிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த ஜூனியர் சீசனின் வெற்றியாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சீசன் 4 விற்கான போட்டியாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை அண்மையில் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் இலங்கையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞன் சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வௌியிடப்பட்ட அவருடைய புரோமோவில் நடுவர்கள் அனைவரும் எழுந்து சென்று அவரை பாராட்டுவதை காணக்கூடியதாக இருந்தது.
இன்னும் எத்ததை இலங்கையர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.