யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை வளாகங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் கனரக வாகனங்கள் வேகமாக பயணிக்கின்றமை தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் செல்லும் மக்கள் அதிக அசௌகரியங்களை சந்தித்து வருவதால் அது குறித்து குறித்த தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.