புங்குடுதீவு சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள காணியில் கட்டடம் அமைப்பதற்காக நேற்றையதினம் குழி தோண்டியவேளை அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த எலும்புக் கூடு, குமுதினிப் படகில் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் உரிய பகுப்பாய்வுகளுக்கு பின்னரே அதன் உண்மைத் தன்மை பற்றி உறுதியாக கூற முடியும் என சம்பந்தப்பட்ட தரப்புக்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.