Thursday, January 16, 2025
24.2 C
Colombo
வடக்குகடலில் குழந்தை பிரசவித்த பெண்

கடலில் குழந்தை பிரசவித்த பெண்

யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தையை பிரசவித்துள்ளார்.

நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார்.

அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்பியுலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர், படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வண்டியில் தாயையும் சிசுவையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

தற்போது தாயும் சிசுவும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles