யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார்.
நேற்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடக்க முயன்ற காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.