வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் கைதடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 41 வயதான செல்வராசா கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடல் கூற்று சோதனைக்கு பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.