Sunday, March 15, 2026
24.5 C
Colombo
வடக்குவவுனியாவில் 9 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

வவுனியாவில் 9 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்கள் நேற்று கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முயன்ற போது, அதனை வழிமறித்த பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த காரினுள் 9 கிலோகிராம் கஞ்சா மற்றும் 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 34, 27, 25 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles