Monday, May 12, 2025
28.3 C
Colombo
அரசியல்துமிந்த, லசந்த, மஹிந்த ஆகியோரை நீக்க இடைக்காலத் தடை

துமிந்த, லசந்த, மஹிந்த ஆகியோரை நீக்க இடைக்காலத் தடை

துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கடந்த சனிக்கிழமை (30) நீக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டம் அன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திஸாநாயக்க, மஹியங்கனை தொகுதி அமைப்பாளராக கே.பி.குணவர்தன நியமிக்கப்பட்டார்.

மேலும், பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த அழகியவன்னவுக்கு பதிலாக மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டு, மஹிந்த அமரவீரவுக்கு பதிலாக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles