Monday, January 19, 2026
30.6 C
Colombo
மலையகம்கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர் கைது

நுவரெலியாவில் இருவேறு பகுதிகளில் நுணுக்கமான முறையில் கஞ்சா விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிரிவுக்குட்பட்ட நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸ் குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று (26) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கஞ்சா கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் பதுளையை சேர்ந்த 25 மற்றும் 32 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதிக்கு அருகில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு வாரத்தில் இரண்டு, அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரம் மலிவு விலையில் அறைகளை வாடகைக்கு வழங்குவதாகவும் ஏனைய நாட்களில் பிரதானமாக கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களுடன் அவர்களை நேற்று (26) நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் குறித்த சகோதரர்களுக்கு கஞ்சா போதைப்பொருள் கிடைக்கும் வழிகள் மற்றும் இவர்களது விநியோக வலையமைப்பு குறித்து நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles