Sunday, July 27, 2025
28.4 C
Colombo
வடக்குதனது 14 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது

தனது 14 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா- தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி நேற்றைய தினம் (21) பாடசாலைக்கு சென்று, தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, துரிதமாக செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்தனர்.

இதன்போது குறித்த சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles