வடக்குகனடா ஆசைகாட்டி இளைஞனிடம் பணம் பறித்த பெண் கைது

கனடா ஆசைகாட்டி இளைஞனிடம் பணம் பறித்த பெண் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி, 60 இலட்ச ரூபா பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 60 இலட்ச ரூபா பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால், இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றில் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபா பணத்தினை இளைஞனிடம் குறித்த பெண் மீள் அளித்தார்.

அதனை அடுத்து பெண்ணை 6 இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles