இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலகளாவிய ரீதியில் 200 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.
அதற்கமைய, மலையாள சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது.
படம் வெளியாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் இப்படம் 200 கோடி ரூபா வசூலிக்கப்பட்டது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் 110 கோடி ரூபா வசூலித்துள்ளதுடன், தமிழகத்தில் மட்டும் 52 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.