Sunday, April 20, 2025
30 C
Colombo
வடக்குபலாலியில் 278 ஏக்கர் காணிகளை கையளிக்க ஏற்பாடு

பலாலியில் 278 ஏக்கர் காணிகளை கையளிக்க ஏற்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் விவசாய காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார்.

பலாலியில் நடைபெறும் நிகழ்விலேயே காணி கையளிப்பு இடம்பெறவுள்ளது.

அத்துடன் பலாலியில் மற்றுமொரு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச காணிகளில் குடியிருப்பேருக்கு காணி உறுதியை வழங்கி வைக்கவுள்ளார்.

அதேவேளை விவசாயிகளின் நலன்களுக்காக விவசாய திணைக்களத்தால் , உருவாக்கப்பட்ட மென்பொருளின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் வெள்ளிக்கிழமை மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவின் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நான்கு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles