Tuesday, December 3, 2024
27 C
Colombo
மலையகம்பதுளையில் வீதியோரத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு

பதுளையில் வீதியோரத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு

பதுளை – ஹெஹெலல்ல – வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகேமுல்லை ஸ்ரீ ஆனந்தராம விகாரைக்கு அருகாமையில் வீதியின் இருபுறங்களிலும் வீதியை துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் ஒருவர் இந்த கைக்குண்டைக் கண்டு 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவொன்று, இந்த கைக்குண்டைக் கைப்பற்றி அதனை செயலிழக்கச் செய்வதற்காக புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைக்கு பயந்து இந்த கைக்குண்டை யாரோ அந்த இடத்தில் வைத்து சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles