Friday, January 17, 2025
28.6 C
Colombo
வடக்குவிடுவிக்கப்பட்ட காணிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

விடுவிக்கப்பட்ட காணிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன், வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67 ஏக்கர் காணி அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்குள் உடனே சென்று மீள் குடியேற முடியாததால், உரிமையாளர்கள் சில விடுவிக்கப்பட்ட தமது காணிகள், வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு திரும்புகின்றனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் காணிகள் வீடுகளில் யாரும் இல்லாத நிலைமையை பயன்படுத்தி, திருடர்கள் அப்பகுதிகளுக்குள் புகுந்து, பயன்தரு மரங்களை வெட்டுவதுடன், வீட்டில் காணப்படும் ஜன்னல், கதவுகளின் நிலைகள், இரும்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றை களவாடி செல்கின்றனர்.

இதனால் வீடுகளையும் சேதமாக்கப்படுவதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருடர்களிடம் இருந்து தமது வீடுகளையும்,காணிகளுக்குள் உள்ள பொருட்களையும் ஒரு சில வாரங்களுக்கு பாதுகாத்து தருமாறு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரிடம் தாம் கோரிய போதிலும், அவர்கள் திருடர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பின்வாங்குவதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles