விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.