மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது.
காசல்ரி,மவுசாகலை,கெனியோன், லக்ஸபான,நவலக்ஸபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன.
மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 23 அடி குறைந்து உள்ளது. காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 22 அடி குறைந்து உள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தாழ்ந்து காணப்படுவதனால் நீரில் மூழ்கிகிடந்த கட்டடங்கள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.
தொடர்ச்சியாக இந்த வரட்சியான காலநிலை காணப்படும் பட்சத்தில் விவசாயத்துறையும் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன.