பதுளை – ரெல்போல – மொரகல பகுதியில் வீடொன்றின் மீது 5 கிலோகிராம் நிறையுடைய பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் மழையுடனான வானிலை எதுவும் நிலவவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.