Thursday, April 17, 2025
28.4 C
Colombo
வடக்குவட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

வட்டுக்கோட்டை இளைஞன் சித்திரவதைக்கு உற்படுத்தியே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த கணவன் மற்றும் மனைவியை பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரு வாகனங்களில் காத்திருந்த வன்முறை கும்பல் கடத்தி சென்று, கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக இறக்கி விட்டு சென்றிருந்தனர்.

மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கி விட்டு சந்தேக நபர்கள் தப்பி சென்றிருந்தனர்.

படுகாயங்களுடன் காணப்பட்ட இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது,இ இளைஞன் கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்களாலும், மூச்சு குழாய்க்குள் இரத்தம் சென்றதாலும் மரணித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles