Monday, December 22, 2025
30 C
Colombo
வடக்குஇளைஞன் படுகொலை: கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு

இளைஞன் படுகொலை: கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தம்பதியை கடத்தி செல்ல பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles