Friday, January 17, 2025
24.1 C
Colombo
வடக்குகிளிநொச்சி OMP அலுவலகத்தை திறந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி OMP அலுவலகத்தை திறந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கிளிநொச்சி அலுவலகத்தினை சனிக்கிழமையன்று திறந்து உல்லாசத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தரும் பெண்ணொருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அலுவலகத்தின் குளியளறை பாவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கழிவு நீர் வெளியேறியதை அவதானித்தவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அலுவலகத்தை திறக்குமாறு பணித்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கிருந்து வெளியே வந்த ஆண் உத்தியோகத்தர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

வேறு நபர்கள் இருக்கின்றார்களா என அந்த உத்தியோகத்தரிடம் பொலிஸார் வினவியபோது, தனது நண்பர் இருப்பதாக கூறியுள்ளார்.

குறித்த அறையை சோதனையிட்ட பெண் பொலிஸார், அங்கு பெண் ஒருவர் இருப்பதை அவதானித்து அவரிடம் வினவினர்.

குறித்த அலுவலகத்தை தானே பராமரிப்பதாகவும், மாலை நேரங்களில் ஓய்வு பெறுவதற்காக இங்கு வருவதாகவும் தெரிவித்த அவர், அந்த பெண் மலசலகூடத்தை பயன்படுத்தவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் அடையாள அட்டையை பரிசோதித்த பொலிஸார் 18 வயதை கடந்த பெண் என்பதை உறுதிப்படுத்தினர்.

ஆனாலும், சனிக்கிழமையில் அலுவலகத்தினை பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆண் உத்தியோகத்தர் கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பிரதான பாடம் ஒன்றை கற்பித்து வருகின்றவர் எனவும் குறித்த பெண்ணும் அக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

தனியார் கல்வி நிலையங்களுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles