யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, நீதிமன்றம் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதுடன், உணவகத்திற்கு சீல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் உணவகங்களில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , 180 கிலோ பழுதடைந்த ரொட்டிகள் , 05 கிலோ இடியப்பம், மற்றும் 08 கிலோ பிட்டு என்பவற்றை பொலித்தீன் பைகளில் கட்டி குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உணவாக உரிமையாளருக்கு 73ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் , குறித்த உணவகத்தை சீல் செய்யுமாறு உத்தரவிட்டது.
அதேவேளை பழுதடைந்த இறைச்சி மற்றும் இறால் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த மற்றொரு உணவக உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் , பழுதடைந்த இறைச்சி மற்றும் ரொட்டியை விற்பனைக்கு வைத்திருந்தமை, மற்றும் உணவகத்தை சுத்தமின்றி பேணிய இன்னொரு உணவக உரிமையாளருக்கு 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.