ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நேற்று (07) நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல்இ இந்த சந்திப்பு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தரப்பில் சாகல ரத்நாயக்கவும் பங்கேற்றுள்ளார்.
தமது கட்சியின் கொள்கைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.
#Daily Mirror