Thursday, January 16, 2025
24.2 C
Colombo
வடக்குபலாலியில் 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்

பலாலியில் 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்

யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் காணி தொடர்பிலான நடமாடும் சேவையின் போது, இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஏற்பட்ட கலந்துரையாடலின் போதே இராணுவ அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பலாலி கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள விவசாய நிலங்களில் 59 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்வரும் 10ஆம் திகதி அந்த காணிகளை விடுவித்து, உரிமையாளர்களிடம் கையளிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 105 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles