நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் (ராஜமணி) என்பவர் நேற்று (03) காணாமல் போயிருந்த நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில்,நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த தோட்டப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.