Friday, March 14, 2025
28 C
Colombo
அரசியல்கட்சியின் நலனுக்காக பதவியை துறந்தார் சிறீதரன்

கட்சியின் நலனுக்காக பதவியை துறந்தார் சிறீதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்தவகையில் அந்த வழக்கானது இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கை தாக்கல் செய்தவரது குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், வைத்தியர் சத்தியலிங்கம், குகதாஸன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கட்சியின் நலன்கருதி புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிவஞானம் சிறீதரன், தனது தலைமை பதவியை துறந்துள்ளார்.

வழக்கின் பிரதிநிதிகளில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வழக்கு விசாரணைக்கு இன்றையதினம் வருகை தராத காரணத்தால் வழக்கானது ஏப்ரல் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சட்டத்தரணி புவீந்திரன் ஆகியோர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles