Saturday, May 10, 2025
29 C
Colombo
மலையகம்14 வயது சிறுவனை வன்புணர்ந்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை

14 வயது சிறுவனை வன்புணர்ந்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை

வலப்பனை -மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய நேற்று (27) மாலை வழங்கினார்.

இந்த வழக்கு 2017 ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களாக நுவரெலியா மேல் நிதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வலப்பனை- மத்துரட்ட பிரதேசத்தை சேர்ந்த மந்திலக்க திஸாநாயக்க, 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளியாக இனங்கானப்பட்ட நபருக்கு எதிரான மூன்று வழக்குகளுக்காக அவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், இந்த தொகையை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தீதிமன்ற தண்டனை பணமாக 15 ஆயிரம் வழங்க வேண்டுமென அறிவித்த நீதிபதி இத்தொகையை செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles