Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
வடக்குயாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நொடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என
வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள்இ அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையை முற்றாக இடைநிறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இருந்தாலும் உள்ளூர் தனியார் பேருந்து சேவை வழமைபோன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles