Thursday, January 16, 2025
26 C
Colombo
வடக்குதவறான முடிவெடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியை

தவறான முடிவெடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியை

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு,பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் நேற்று (27) தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில் வட்டு தெற்கு நாவலடி வீதி என்ற முகவரியில் வசித்து வந்த 59 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பி.ப 5.00 மணிக்கும் பி.ப 6.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் 2016ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு தடவை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என்றும், அதற்கு பின்னர் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles