Tuesday, March 18, 2025
24 C
Colombo
வடக்கு15 வயது சிறுமியை கடத்திய 18 வயது இளைஞன் கைது

15 வயது சிறுமியை கடத்திய 18 வயது இளைஞன் கைது

15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை நேற்று முன்தினம் (24) இரவு வாகரையில் வைத்து கைது செய்துள்ளதுடன், சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள சிறுமி கடந்த 7ம் திகதி பாடாலைக்கு சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த சிறுமியை அவரது காதலனான குறித்த இளைஞன் வாகரைப் பிரதேசத்திலுள்ள அவரது சிறிய தாயாரின் வீட்டிற்கு கடத்திச் சென்று வைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சனிக்கிழமையன்று இரவு வாகரையில் சிறுமி தங்கவைக்கப்பட்ட வீட்டை சுற்றுவளைத்து முற்றுகையிட்ட பொலிஸார், சிறுமியை மீட்டதுடன் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 18 வயது இளைஞன் மற்றும் இளைஞனுக்கு உதவிய குற்றச்சாட்டில் 47 வயதுடைய சிறிய தாயார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதில் மீட்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (25) ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 07 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles