தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.