Saturday, September 21, 2024
28 C
Colombo
வடக்குகச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த இந்தியர்கள்

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த இந்தியர்கள்

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன.

வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் இந்திய பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை.

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles