கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.
இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய தினம் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.