பதுளை நகரின் மத்தியில் இன்று (22) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை கீழ்ராஜா வீதி மற்றும் பஸார் வீதிக்கு அருகில் உள்ள நடைபாதைக்கு அருகில் குறித்த சடலம் மீட்கப்பட்டது.
குறித்த நபர் சுமார் 60 வயதானவர் எனவும், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.