இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயில் உள்ள தனது வீட்டில் இருந்து நீர்வேலி சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிரந்த போது, வீதியின் குறுக்கே ஓடிய நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவரை மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.