யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய தங்கரத்தினம் தனஸ்வரி என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட வேளையில் பேருந்தின் சாரதி பேருந்தை நகர்த்தியமையால், தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்ததில் படுகாயமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.