Friday, August 29, 2025
26.1 C
Colombo
மலையகம்நுவரெலியாவிற்கு வரும் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

நுவரெலியாவிற்கு வரும் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


நுவரெலியா நகர எல்லை , ஹவாஎலியா பொரலந்த உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலே ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி, நுவரெலியா மீபிளிமான பட்டிப்பொல அணுகு வீதிகள், போன்ற பகுதிகளில் இந்த அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வீதியில் போனிகல் குதிக்கும் அபாயம் உள்ளதால், மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், தமக்கு முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத நிலையில் வாகன சாரதிகள் ஒவ்வொரு வாகனத்தின் மின்விளக்குகளையும் ஏற்றுமாறு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles