இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணி வரை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில்,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், ந.ஸ்ரீகாந்தா, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.