Sunday, May 12, 2024
30 C
Colombo
வடக்குஇந்திய மீனவர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!

இந்திய மீனவர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!

நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் ஒரு மீனவர் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரிபால இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில்...

Keep exploring...

Related Articles