யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.