Monday, January 12, 2026
25 C
Colombo
வடக்குயாழில் கோர ரயில் விபத்து: தந்தையும் மகளும் பலி

யாழில் கோர ரயில் விபத்து: தந்தையும் மகளும் பலி

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் ரயிலுடன் வேனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேனில் தம்பதி மற்றும் அவர்களது குழந்தை பயணித்த நிலையில், தந்தை சம்பவ இடத்திலேயெ பலியாகியதுடன், குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளது.

தலையில் பலத்த காயமடைந்த மனைவி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் ரயில் கடவை காப்பாளர் இல்லாததே இந்த விபத்துக்கு காரணம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles